அடுக்கிசைவண்ணம் இருபது

குறில் அகவல் அடுக்கிசைவண்ணம், நெடில் அகவல் அடுக்கிசை வண்ணம், வலிஅகவல் அடுக்கிசை வண்ணம், மெலி அகவல் அடுக்கிசை வண்ணம், இடை அகவல்அடுக்கிசை வண்ணம் – என அகவல் அடுக்கிசை வண்ணம் ஐந்து.எ-டு : ‘கொடியிடை மாதர் மேனி குவளைமலர் உண்கண் என்றும்பிடிநடை மாதர் மாண்ட நடைதானெனப் பேது செய்தும்வடிவொடு வார்ந்த மென்றோள் வளைசேர்ந்தகை காந்தள் என்றும்இடையிடை நின்று நின்று பலகாலும் உவப்ப தென்னோ!’(வளையாபதி)இன்ன பிறவும், எழுசீரடியால் வந்தனவும் எல்லாம் குறில் அகவல்அடுக்கிசை வண்ணத்தனவாம்.குறில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம், நெடில் ஒழுகல் அடுக்கிசை வண்ணம்,வலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், மெலி ஒழுகல் அடுக்கிசை வண்ணம், இடைஒழுகல் அடுக்கிசை வண்ணம் என ஒழுகல் அடுக்கிசை வண்ணம் ஐந்து.எ-டு : ‘மாலையால் வாடையால் அந்தியால் மதியால்மனமுனம் உணர்வது நோயுறச் செய்தசோலையால் தென்றலால் சுரும்பிவர் பொழிலால்சொரிதரு காரொடு விரிதரு பொழுதேகோலவால் வளையால் கொடுப்பறி யானேல்கொள்வதும் உயிரொடு பிறரொடும் அன்றோகாலையார் வரவே காதலும் ஆங்கோர்காலையென் னுங்கடல் நீந்திய வினையே’இன்ன பிறவும், எண்சீரடி மிக்கு வருவனவும் ஒழுகல் அடுக்கிசைவண்ணத்தனவாம்.குறில் வல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் வல்லிசை அடுக்கிசைவண்ணம், வலி வல்லிசை அடுக்கிசை வண்ணம், மெலி வல்லிசை அடுக்கிசைவண்ணம், இடை வல்லிசை அடுக்கிசை வண்ணம் – என வல்லிசை அடுக்கிசை வண்ணம்ஐந்து.எ-டு : கடியான் வெயிலெறிப்பக் கல்லளையுள் வெதும்பிய கலங்கற்சின்னீர்அடியால் உலகளந்த ஆழியான் ஆக்கிய அமிழ்தென் றென்ணிக்கொடியான் கொடுப்பக் கொடுங்கையால் கொண்டிருந்து குடிக்கல்தேற்றாள்வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம் பீன்றாளிவ்வருவாளாமே.’இவ்வாறு அறுசீரான் வருவன வெல்லாம் வல்லிசை அடுக்கிசை வண்ணமாம்.குறில் மெல்லிசை அடுக்கிசை வண்ணம், நெடில் மெல்லிசை அடுக்கிசைவண்ணம், வலி மெல்லிசை அடுக்கிசைவண்ணம், மெலி மெல்லிசை அடுக்கிசைவண்ணம், இடை மெல்லிசை அடுக்கிசை வண்ணம் – என மெல்லிசை அடுக்கிசைவண்ணம் ஐந்து.எ-டு : ‘பிடியுடை நடையடு நடையினள் தெரியின்கடிபடும் இலமலர் அடிநனி தனதாம்துடியிடை அடுமிவள் நடுவொடி வதுபோல்வடுவடி அடுமிவள் நெடுமலர் புரைகண்’இவை போல்வன மெல்லிசை அடுக்கிசை வண்ணமாம்.இவை இருபதும் மேடு பள்ளமான நிலத்தில் வண்டிச்சக்கரம்செல்வதுபோலவும், நாரை இரைத்தாற் போலவும், தாரா என்னும் பறவையதுஒலிபோலவும், தார்மணி ஓசைபோல வும் வரும். (யா. வி. பக். 413, 418,419)