அடி (3)

நான்கு சீர்களைக் கொண்டதொரு தொடரே அடி எனக் கூறப்படும்.எனவே, நாற்சீரின் மிக்கும் குறைந்தும் வரின் அவை அச்சீர்களின்எண்ணலளவையான் இருசீரடி, முச்சீரடி, ஐஞ்சீரடி, அறுசீரடி, எழுசீரடி எனவிதந்து கூறப்படும் என்றவாறு.அடி என்று வாளா கூறின், நாற்சீரடியையே குறிக்கும் என்க. அதனான்நாற்சீரடிக்கு நேரடி, அளவடி என்ற பெயர்களும் உள. ‘பட்டாங்கு அமைந்தஅடி’ (சொல் 407) என்றமையும் காண்க.இந்நாற்சீரடிகளை உயிர்ப்புடையவாய் நிற்கும் எழுத்துக் களின்அளவையான் குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்துவகையாக வகுத்தோதுவர்.குறியன், நெடியன் என்புழி உறுப்புக்களின் குறை நிறைகளைக் கருதாதுஅளவை கருதியே கொள்ளப்படுதல் போல, அடியி னது ஓசையை எழுத்தளவுகளைக்கருதியே குறளடி முத லாகப் பாகுபாடு செய்தார் என்பது. (தொ. செய். 32 ச.பால.)