இரு சீரான் வந்த அடி குறளடி; முச்சீரான் வந்த அடி சிந்தடி;நாற்சீரான் வந்த அடி அளவடி அல்லது நேரடி; ஐஞ்சீரான் வந்த அடி நெடிலடி;அறுசீர் முதலாகப் பதினொரு சீர்காறும் வந்த அடி கழிநெடிலடி. (யா. கா.12)இவ்வடிகளுக்கு முறையே ஆகாய அடி, காற்றடி, நெருப்படி, நீரடி, மண்ணடிஎனப் பஞ்ச பூதங்களின் பேரே பெயராம்.(வீ. சோ. 109)பதின்மூன்று சீர்காறும் கழிநெடிலடி நிகழும் என்னும்(யா.க. 25 உரை)நாற்சீர் அடியையே எழுத்து எண்ணிக்கையை ஒட்டிக் குறளடி, சிந்தடி,அளவடி அல்லது நேரடி, நெடிலடி, கழி நெடிலடி எனத் தொல்காப்பியனார்பகுப்பர்.“நாலெழுத்து முதல் 6 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும்குறளடி;ஏழெழுத்து முதல் 9 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும் சிந்தடி;பத்தெழுத்து முதல் 14 எழுத்தின்காறும் உயர்ந்த 5 அடியும்அளவடி;பதினைந்தெழுத்து முதல் 17 எழுத்தின்காறும் உயர்ந்த 3 அடியும்நெடிலடி;பதினெட்டெழுத்து முதல் 20 எழுத்தின் காறும் உயர்ந்த 3 அடியும்கழிநெடிலடி;இருபது எழுத்தின் மிக்க நாற்சீர் அடிப்பா இல்லை”. (யா. கா. 43 உரை)(யா. க. 25 உரை)குறளடி முதலாகிய ஐந்தடியும் ஆசிரியப்பாவிற்கு உரிய. சிந்தடியும்அளவடியும் நெடிலடியின் முதற்கண் இரண்டடி யும் வெண்பாவிற்கு உரிய.அளவடியுள் கடைக்கண் இரண் டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் இலக்கணக்கலிப்பா விற்கு உரிய.நான்கெழுத்து முதலாகப் பன்னிரண்டு எழுத்தின்காறும் இருசீரடிவஞ்சிப்பாவிற்குரிய. முச்சீரடி வஞ்சிப்பாவிற்கு 8 எழுத்து முதலாகநெடிலடிக்கு ஓதிய எழுத்தளவும் வரப் பெறும். வெண்பா ஆசிரியம் கலியுள்வருஞ்சீர் 5 எழுத்தின் மிகா. வஞ்சிப்பாவின் சீர் 6 எழுத்தின் மிகா.சிறுமை மூன் றெழுத்தாவது சிறப்புடைத்து; இரண்டு எழுத்தினானும் சீர்அருகி வரப்பெறும். (யா.க. 25 உரை)