வஞ்சி மண்டிலத்துறை எந்த அடியையும் மாற்றிக் கொள்ள லாம்; வஞ்சிமண்டில விருத்தமும் அவ்வாறே மாற்றிக் கொள்ளலாம். யானைத்தொழில்முதலாகிய செய்யுள்களை யெல்லாம் அடிவகுத்தற்கு இலக்கணம் சொன்னார் அடிவகுத்தும் பயனின்மையானும், அடிவகுத்தற்குக் கட்டளைப் பட்டு நிரம்பியிருப்பதோர் இலக்கணம் இன்மை யானும் அதுவும் பிழை. இந்நூலார் எதுகையேகருவியாக அடி வகுத்தார். (வீ. சோ. 125 உரை)