நாற்சீரடியில் 625 விகற்பங்கள் வந்துள்ளன. அறுநூற்றிருபத்தைந்தோடும் ஐந்தாவது வரும் ஐஞ்சீரையும் உறழ 3125 அடியாகும்.அதன்கண் ஆறாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 15625 அடியாகும். அதன்கண்ஏழாவது இவ்வகை ஐஞ்சீரையும் உறழ 78125 அடியாகும். இவ்வகையான் உறழஅடிவரையறை கடந்தோடும். அன்றியும், இச்சொல்லப்பட்ட அடிகளை அசையானும்எழுத்தானும் விரிக்க வரம்பிலவாம். ஆதலின் நாற்சீரடிக்கே வரையறைகூறப்பட்டது.(தொ. செய். 49. இள.)