நீண்டு உரைநடை போல எழுதப்பட்டிருக்கும் செய்யுளை இஃது இன்ன பாஎன்றோ, இன்ன பாவின் இனம் என்றோ வரையறுத்துக் கூறுதல் என்பது,எண்எழுத்தில் திண்ணி யராய், எஃகு செவியராய், நுண்ணுணர்விற் சேர்ந்தநுழை வினராய், மண்மேல் நடையறிந்து கட்டுரைக்கும் நாவி னோர்க்கேஇயல்வது என்பதாம்.(யா. வி. பக். 135 உரை மேற்.)