கலிவெண்பாட்டும், கைக்கிளைச் செய்யுள் – புறநிலை வாழ்த்து – வாயுறைவாழ்த்து – செவியறிவுறூஉ – என்னும் நால்வகை மருட்பாவும்என்னுமிவற்றிற்கு அடிவரையறை இல்லை.கலிவெண்பாட்டு: உலாச்செய்யுள், மடற்செய்யுள் போல்வன.கைக்கிளை: அகப்புறமும் புறப்புறமுமாகி வரும் கைக்கிளை.(தொ. செய். 160 நச்.)