1. ஒத்த எழுத்தால் வரும் மோனைத்தொடை2. கிளையெழுத்தால் வரும் மோனைத்தொடை3. ஒத்த எழுத்தால் வரும் எதுகைத் தொடை4. கிளையெழுத்தால் வரும் எதுகைத்தொடை5. சொல்லொடு சொல் முரணும் முரண்தொடை6. பொருளொடு பொருள் முரணும் முரண்தொடை7. சொல்லொடு பொருள் முரணும் முரண்தொடை8. எழுத்தியைபுத்தொடை9. அசையியைபுத்தொடை10. சீரியைபுத்தொடை11. உயிரளபெடைத்தொடை12. ஒற்றளபெடைத்தொடை13. பெயரொடு பெயர் நிரனிறைத்தொடை14. பெயரொடு வினை நிரனிறைத்தொடை15. இரட்டைத் தொடை16. செந்தொடை – என்பனவாம்.தலைமையாய தொடை பத்தாம். அவையாவன :1. ஒத்த எழுத்து மோனை 2. கிளையெழுத்து மோனை 3. ஒத்த எழுத்தெதுகை 4.கிளையெழுத்தெதுகை 5. சொல் முரண் தொடை 6. பொருள் முரண்தொடை 7.எழுத்தியைபுத் தொடை 8. அசையியைபுத்தொடை 9. அளபெடைத் தொடை 10.நிரனிறைத் தொடை என்பனவாம்.இப்பத்துத் தலையாய தொடைகளையும் இணை, பொழிப்பு, கூழை, ஒரூஉ, முற்றுஎன்னும் ஐந்தொடும் உறழ, 50 சீர்வகைத் தொடைகள் வரும். (தொ. செய். 101ச. பால.)