குறளடி, சிந்தடி, அளவடி, நெடிலடி, கழிநெடிலடி, என அடி வகைகள்ஐந்தாம். (இவற்றைச் சீர்வகைகளைக் கொண்டு கணக்கிடுவர் ஒரு சார்ஆசிரியர். நாற்சீரடியிலேயே எழுத் தெண்ணிக்கையைக் கொண்டு கணக்கிடுவர்ஒருசார் ஆசிரியர்.)குறளடி இருசீர்களையுடையது; சிந்தடி முச்சீர்களையுடை யது; அளவடிநாற்சீர்களையுடையது; நெடிலடி ஐஞ்சீர்களை யுடையது; கழிநெடிலடி ஆறுமுதல்பத்துச் சீர்கள் வரை யுடையது; ஆறுமுதல் எட்டுச்சீர்காறும் கொண்ட அடிதலையாகு கழிநெடிலடி எனவும், ஒன்பது பத்துச் சீர்களைக் கொண்ட அடிஇடையாகு கழிநெடிலடி எனவும், பத்துச் சீரின் மிக்குள்ள அடி கடையாகுகழிநெடிலடி எனவும், கூறப்படும். படவே, எண்சீரின் மிக்குவரும்கழிநெடிலடிகள் சிறப்பில. நாற்சீரடியே சிறப்புடைத்து ஆதலின், அதுவேநேரடி எனவும் அளவடி எனவும் வழங்கப்படும். (யா. க. 24, 25 உரை)இனி, குறளடி முதலிய ஐவகை அடிகளையும் நாற்சீரடி யிலேயே கொண்டுஎழுத்தெண்ணிக்கையால் பெயரிட்டு 4 முதல் 6 எழுத்து முடியக் குறளடிஎனவும், 7 முதல் 9 எழுத்து முடியச் சிந்தடி எனவும், 10 முதல் 14எழுத்து முடிய அளவடி எனவும், 15 முதல் 17 எழுத்து முடிய நெடிலடிஎனவும், 18 முதல் 20 எழுத்து முடியக் கழிநெடிலடி எனவும், 20 எழுத்தின்மிக்க நாற்சீரடி இல்லை எனவும், ஐவகை அடியும் ஆசிரியப் பாவிற்கு உரியஎனவும், சிந்தடியும் அளவடியும் நெடிலடி களின் முதற்கண் இரண்டடியும்வெண்பாவிற்குரியன எனவும், அளவடியின் கடைக்கண் இரண்டடியும் நெடிலடியும் கழிநெடிலடியும் கலிப்பாவிற்குரியன எனவும், 4 முதல் 12 எழுத்துமுடியக் குறளடி வஞ்சிப்பாவிற்குரியன எனவும், முச்சீரடிவஞ்சிப்பாவிற்கு 9 முதல் 17 எழுத்தளவும் உரியன எனவும், வெண்பாஆசிரியம் கலி இவற்றில் வரும் சீர்கள் ஐந்தெழுத்தின் மிகா எனவும்,சீரின் எழுத்தளவின் சிறுமை மூன்று, ஒரோவழி ஈரெழுத்தானும் சீர் வரும்எனவும் கூறும் இலக்கண மரபும் உண்டு. எழுத்தெண்ணும்வழிக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒற்றும் என்னு மிவற்றை நீக்கிக்கணக்கிடல் வேண்டும். (தொல். செய். 36-44 பேரா.)