அடிமொழிமாற்று

இஃது இரண்டடி மொழிமாற்று எனவும்படும். இரண்டடி களிலும் உள்ளசொற்களைப் பிரித்துப் பொருள் பொருத்த முறக் கூட்டிப் பொருள்செய்யும்பொருள்கோள் இது.எ-டு : ‘ஆலத்து மேல குவளை குளத்துளவாலின் நெடிய குரங்கு’இதன்கண், ‘ஆலத்துமேல வாலின் நெடிய குரங்கு’ எனவும், ‘குவளைகுளத்துள’ எனவும் ஈரடிகளிலும் சொற்களைப் பொருள் பொருத்தமுறக்கூட்டியவாறு. (யா. வி. பக். 390)