அடிமுரண் தொடை

அடிதோறும் முதற்சீர்க்கண் சொல்லாலோ பொருளாலோ அவ்விரண்டாலோமறுதலைப்படத் தொடுப்பது.எ-டு : 1) ‘செந்தொடைப் பகழி வாங்கிச் சினம்சிறந்துகருங்கைக் கானவன் களிற்றுநிறத் தழுத்தலின்’செந்தொடை – செம்மைநிறம் இல்லை; செவ்விதாகத் தொடுக்கப்பட்ட என்பதுபொருள்.கருங்கை – கருமை நிறம் இல்லை; கொலைசெய்யும் கை என்பது பொருள்.இதன்கண், சொல்பற்றிய அடிமுரண் அமைந்தவாறு.2. ‘இருள்விரிந் தன்ன மாநீர் மருங்கில்நிலவுக்குவிந் தன்ன வெண்மணல் ஒருசிறை’எனப் பொருள் பற்றிய அடிமுரண் அமைந்தவாறு.3. நெடுநீர்ப் பொய்கை நாப்பண் சென்றுகுறுநர் தந்த அவிழ்மலர்நெடுநீர் – நெடுமை என்ற சொல்லும் உண்டு; நீரும் நெடிது.குறுநர் – பறிப்போர். குறிது என்ற சொல் உண்டு; பொருள் இல்லை. ஆகவே,இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடு முரணிய அடிமுரண் அமைந்தவாறு.4. ‘ செந்தீ அன்ன சினத்த யானை நீர் நசை பெறாஅக் கானல்’செந்தீ என்புழிச் செம்மையும் உண்டு; தீக்கண் செய்யது என்ற சொல்லும்உண்டு. நீர் நசை என்புழிச் சொல்முரண் இல்லை; தீக்கு நீர் மாறுபட்டதுஆதலின் பொருள் முரண் உண்டு. ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் பொருளொடுமுரணிய அடிமுரண் அமைந்தவாறு.5. ‘ செங்குரல் ஏனல் சிதையக் கவர்ந்த பைங்கிளி இரியச் சிறுகுடித் ததும்பும்.’செங்குரல் என்புழிச் சொல்லும் உண்டு; செம்மை குரற் கண்ணும் உண்டு.பைங்கிளி என்புழிச் சொல்லும் உண்டு; பசுமை கிளிக்கண்ணும் உண்டு.ஆகவே, இதன்கண் சொல்லும் பொருளும் சொல்லொடும் பொருளொடும் முரணியஅடிமுரண் அமைந்தவாறு. (தொ. செய். 95 நச்., யா.க. 38 உரை)