அடிமறிமாற்றுப் பொருள்கோள்

பொருளுக்கு ஏற்குமிடத்தில் எடுத்து நீங்காது கூட்டப்படும்அடியையுடையனவும், யாதானுமோர் அடியை யெடுத்து அச்செய்யுளுள் முதல் நடுஇறுதியாகக் கூட்டினும் பொரு ளோடு ஓசையும் பொருள் மாத்திரமும் மாறாதஅடியை யுடையனவும் ஆகிய செய்யுட்கண் அமைந்த பொருள்கோள் அடிமறிமாற்றுப்பொருள்கோளாம்.எ-டு : ‘நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம் துடையார்கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்விடுக்கும் வினையுலந்தக் கால்’ (நாலடி. 93)இதனுள், ‘கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;விடுக்கும் வினையுலந்தக் கால், மிக்குற்றுப் பற்றினும் நீங்காதுசெல்வம்; (இஃதறியாதவர்) நடுக்குற்றுத் தற் சேர்ந்தார் துன்பம்துடையார்’ என அடிகள் ஏற்புழி எடுத்துக் கூட்டப்படும் அடிமறிமாற்றுஅமைந்தது.எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய் தோழியான் வாழு மாறே’.இதனுள், யாதானுமோர் அடியை எடுத்து முதல் நடு இறுதி யாகக்கூட்டினும் பொருளும் ஒசையும் மாறாத அடிமறி மாற்று அமைந்தது.எ-டு : ‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும் குற்றம்;விலைப்பாலிற் கொண்டூன் மிசைதலும் குற்றம்;சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்;கொலைப்பாலும் குற்றமே யாம்’ (நான்மணி. 100)இதனுள், ஈற்றடி யொழிந்த மூன்றடியுள் யாதானுமொன்றை யெடுத்துயாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் பொருளும் ஓசையும் மாறாமல்,ஈற்றடியை யெடுத்து யாதானுமோர் இடத்துக் கூட்டி உச்சரிப்பின் ஓசைவேறுபட்டுப் பொருள் வேறுபடாமல், வந்த அடிமறிமாற்று அமைந்தது. (நன்.419)ஒருசார் யாப்புநூலுள் பொருள்கோளும் ஒழிபாகத் தழுவப்பட்டது.