அடிமறிமாற்றுப் பொருள்கோள்

பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்து நீக்காது கூட்டும் அடியையுடையனவும், யாதானும் ஓரடியை எடுத்து அச்செய்யுளின்இறுதிநடுமுதல்களில் யாதானும் ஓரிடத்துக் கூட்டினும் பொருளோடுஓசைமாட்சியும், ஓசையொழியப் பொருள் மாட்சியும் வேறுபடாதஅடியையுடையனவும் அடிமறி மாற்றுப் பொருள்கோளாம். வருமாறு :‘நடுக்குற்றுத் தற்சேர் ந்தார் துன்பம்துடையார்கொடுத்துத்தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்மிடுக்குற்றுப் பற்றினும் நில்லாது செல்வம்விடுக்கும் வினைஉலந்தக் கால்’ (நாலடி. 93)இதனுள், “கொடுத்துத் தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும்;விடுக்கும் வினை உலந்தக்கால் மிடுக்குற்றுப் பற்றினும் செல்வம்நில்லாது; (இஃது அறியாதார்) நடுக்குற்றுத் தற்சேர்ந்தார் துன்பம்துடையார்” என அடிகளை ஏற்கு மிடத்து எடுத்துக் கூட்டுக.‘மாறாக் காதலர் மலைமறந்தனரேஆறாக் கட்பனி வரல்ஆ னாவேவேறாம் என்தோள் வளைநெகி ழும்மேகூறாய் தோழியான் வாழு மாறே’இதனுள், எவ்வடியை எங்கே கூட்டினும் பொருளும் ஓசையும் வேறுபடாமைகாண்க.‘அலைப்பான் பிறிதுயிரை ஆக்கலும்குற்ற ம்விலைப்பாலில் கொண்டூன் மிசைதலும் குற்றம்சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம்கொலைப்பாலும் குற்றமே யாம்.’ (நான்மணி. 26)இதனுள், ஈற்றடி ஒழிந்த மூன்றடியுள் யாதானும் ஒன்றை எடுத்துயாதானும் ஓரிடத்துக் கூட்டி உச்சரித்துப் பொரு ளும் ஓசையும்வேறுபடாமையும், ஈற்றடியை எடுத்து யாதானும் ஓரிடத்துக் கூட்டிஉச்சரித்து ஓசைவேறுபட்டுப் பொருள் வேறுபடாமையும் காண்க. (நன். 419சங்.)பொருளுக்கு ஏற்குமிடத்து எடுத்துக் கூட்டும் அடிகளை யுடையவற்றை,பொருளும் ஓசையும் வேறுபடாத அடிமறி மாற்றுப் பொருள்கோளாகவே கொண்டார்,சில உறுப்புக் குறைந்தாரையும் மக்கள் என்றாற்போல. (நன். 419 சங்.)