அடிமறிமண்டில வெளிவிருத்தம்

இது வெண்பா இனங்களுள் ஒன்றாகிய வெளிவிருத்தத்தின் இரு வகைகளுள்ஒன்று; பெரும்பாலும் மூன்றடியால் அமைவது; அடிதோறும் பொருள்முடியப்பெற்று, யாதோரடியை முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் ஓசையும்பொருளும் மாறாதது; அடிதோறும் ஒரு சீரே ஐந்தாம் சீராக வரப் பெறும்.(யா. க. 68, யா. கா. 28)எ-டு : ‘அங்கட் கமலத் தலர்க்கமல மேயீரும் – நீரே போலும்வெங்கட் சுடிகை விடஅரவின் மேயீரும் – நீரே போலும்திங்கட் சடையீரும் தில்லைவனத் துள்ளீரும் – நீரே போலும்’(சி. செ. கோ. 39)இதன்கண், ‘நீரே போலும்’ எனும் சீர் ஐந்தாம் சீராக மூன்றடி யிலும்ஒப்ப நிகழ்ந்தவாறு காண்க. இது வெண்டளையான் அமைந்தமை காண்க.