அடிதோறும் பொருள் முற்றி வந்த ஆசிரிய விருத்தம் அடிமறி மண்டிலஆசிரியப்பாவிற்கு இனம் ஆம்.எ-டு : அன்றயனை உந்தியின் அளித்தபரன் மேவுவதும் அத்தி கிரியே;சென்றுகரி கவ்வுமுத லைக்கணற மேவுவதும் அத்தி கிரியே;வென்றவன் வணங்குவது மேலில கெயிற்றரிய தான வரையே;தன்றொழில் முருக்குவது தாளில கெயிற்றரிய தான வரையே;இவ்வறுசீர் ஆசிரிய விருத்தம் அடிதோறும் பொருள் முற்றியே வந்தவாறுகாண்க. யாதோரடியை எடுத்து முதல் நடு இறுதியாக உச்சரிப்பினும் பொருளும்ஓசையும் மாறப் பெறாமையும் காண்க. (வீ. சோ. 122 உரை)