நான்கடிகளும் ஒரே விகற்பமாக அமைந்து, அடிதோறும் செய்திமுற்றுப்பெறப் பொருந்தி, நாற்சீரடியாய், எந்த அடியையும் முதல் நடுஇறுதியாக மாற்றும்படிக்கு அமையும் ஆசிரியப்பாவாகிய இஃதுஆசிரியப்பாவின் நால்வகைகளுள் ஒன்று.எ-டு : ‘மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய் தோழியான் வாழு மாறே’இந்நாலடி ஆசிரியப்பா எந்த அடியை யாண்டு வைத்து உச்சரிப்பினும்ஓசையும் பொருளும் மாறாதமைந்திருத்தலின், அடிமறிமண்டில ஆசிரியம் ஆம்.(யா. க. 73, யா. கா. 29.)அடிமறிமண்டில ஆசிரியப்பா மூன்றடியான் வருதலும் உண்டு.எ-டு : ‘தீர்த்தம் என்பது சிவகங் கையே;ஏத்த ருந்தலம் எழிற்புலி யூரே;மூர்த்தி அம்பலக் கூத்தன துருவே’ (சி. செ.கோ. 45)