அடிமறிப்பொருள்கோள்

இப்பொருள்கோள் அமைந்த செய்யுளாவது, சீர் நின்ற விடத்தே நிற்பஅடிகள் தத்தம் நிலையில் திரிந்து ஒன்றனிடத் தில் ஒன்று சென்றுநிற்பது. ஆதலின் எல்லா அடியும் யாண்டும் செல்லும் என்பதாம்.எ-டு : மாறாக் காதலர் மலைமறந் தனரே;ஆறாக் கட்பனி வரலா னாவே;வேறா மென்தோள் வளைநெகி ழும்மே;கூறாய், தோழியான் வாழு மாறே’.இதனுள் சீர் நின்றாங்கு நிற்பப் பொருள் சிதையாமல் எல்லா வடியும்தடுமாறியவாறு கண்டுகொள்க.இப்பொருள்கோள் பெரும்பான்மையும் நாலடிச் செய்யுட் கண் அல்லதுவாராது. (தொ. எச்ச. 11 சேனா.)பொருள்கோள், யாப்புப்பற்றிய நூல்களில் ஒழிபாகக் கூறப்படுகிறது.(யா. வி. பக். 389)