அடிமறிஉவமம் கூடாமை

அடிமறிமாற்றுப் பொருள்கோள் உடையதாக அமைந்த பாடலில் ஓரடியுள் உவமம்கூறி ஓரடியுள் பொருள் வைத்தால் அப்பாடல் அடிகளை வேண்டியவாறு மாற்றிப்பொருள் கொள்ளுங்காலை, இன்ன உவமத்திற்கு இன்னது பொருள் (- உபமேயம்)என்பது நன்கு புலனாகாமல்போம் ஆதலின், அடிமறிப்பொருள்கோளுடையபாடல்களில் உவமமும் பொருளும் அமைத்தல் மயக்கம் தரும்; ஆதலின் அடிமறிஉவமம் கூடாது என்ப. (தொ. பொ. 312 பேரா.)