அடிமயக்கு

1. ஒருபாவிற்குரிய அடி பிற பாவில் வந்து கலத்தல். ஆசிரியப்பாவில்இயற்சீர்வெள்ளடி, வெண்பா உரிச்சீர் கலந்த இயற்சீர் வெள்ளடி, வஞ்சியடி- இவை மயங்குதல்; கலிப்பாவில் வெள்ளடியும் ஆசிரியஅடியும் மயங்குதல்;வஞ்சிப்பாவில் ஆசிரியஅடியொடு கலியடியும் ஒருசார் வெள்ளடியும்மயங்குதல் – போல்வன, அடி மயக்கமாம்.எ-டு : ‘எறும்பி அளையின் குறும்பல் சுனைய………………………நொதுமற் கழறுமிவ் வழுங்க லூரே’ (குறுந். 12)இவ்வாசிரியப்பாவில், முதலடி இயற்சீர் விரவிய வெள்ளடி.2. ‘ அங்கண் மதியம் அரவின்வாய்ப் பட்டெனப்………………………தெண்கடற் சேர்ப்பன் உண்டவென் நலக்கே’இவ்வாசிரியப்பாவில், முதலடி காய்ச்சீர் விரவிய இயற்சீர் வெள்ளடி;வெண்பா அடியாக வந்து மயங்கிற்று.3. ‘இருங்கடல் தானையொடு’ என்னும் புறநா. 363ஆம் பாடலில்,‘உப்பிலாஅ அவிப்புழுக்கல்கைக்கொண்டு பிறக்குநோக்காதிழிபிறப்பினோன் ஈயப்பெற்று’என்பன வஞ்சியடிகள்.4. ‘காமர் கடும்புனல்’ என்னும் கலி. 39-இல், இடையே கொச்சகங்கள்வெண்பாவாக வந்தன. அறுசீர் ஐஞ்சீரடிகள் முடுகியலாய் வர, ஆசிரியச்சரிதகத்தால் பாடல் முடிந்த வாறு.5. பட்டினப்பாலையுள்,‘நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்’ (22)என்றித் தொடக்கத்தன ஆசிரியஅடி.‘வயலாமைப் புழுக்குண்டும் வறளடும்பின் மலர்மிலைந்தும்’என்பது கலியடி‘கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை’ (23)என்பது இயற்றளை வெள்ளடி (யா. க. 29-31)