அடிமடக்கு

பொருள் வேறுபட்டேனும் வேறுபடாமலேனும் செய்யுளின் அடி மீண்டுமீண்டுவருவது. பொருள் வேறுபட்டு வருவதே சிறப்புடைத்தாகச் சொல்லணிவகையுள்அடங்கும். தண்டி.96‘ஒன்றி னம்பர லோகமேஒன்றி னம்பர லோகமேசென்று மேவருந் தில்லையேசென்று மேவருந் தில்லையே’ (சி. செ. கோ. 80)இதன்கண், முதலடியே இரண்டாமடியாகவும், மூன்றா மடியேநான்காமடியாகவும் மடக்கியவாறு காண்க. பொருள் வேறுபட்டு வந்தவாறு.‘சென்று தில்லையே மேவரும்; பரலோகமும் ஒன்றினம்; ஒன்று இன்னம் பரலோகமேசென்றுமே வருந்து இல்லையே’ – எனப் பொருள்செய்க.