அடிதோறும் முதற்சீர் நான்காம் சீர்களில் மோனை எதுகை களாகியதொடைபெற்று, நேரிசை வெண்பாவிற் சிறிது வேறுபட வந்த இன்னிசை வெண்பாஇது.(முதற்சீர்ச் சொல்லே சிறிது வேறுபட்டு ஒரூஉத்தொடையாக நிகழும்என்க.) (யா.கா.25. உரை)எ-டு :`மழையின்றி மாநிலத்தார்க் கில்லை – மழையும்தவமிலார் இல்வழி இல்லை – தவமும்அரசிலார் இல்வழி இல்லை – அரசனும்இல்வாழ்வார் இல்வழி இல்’ (நான்மணி. 46)