அடிகள் அளவிறந்தன ஆமாறு

புலவோர் பாக்களைப் பண்ணுங்கால் அவற்றைப் பதினேழ் நிலத்தும் உள்ளஐவகை அடிக்கும் சீர்வகையால் அடிகளை உறழ்ந்து கண்டாற்போல, குறளடிமுதலாக ஒவ்வோரடிக்கும் எழுத்தளவையான் உறழ்ந்து விரிப்பினும், பதினேழ்நிலங்களையும் மூவகைப்பாக்களுக்கும் உரிமை கூறியவாறு வைத்துத்தனித்தனியே விரிப்பினும் அவை அளவிறந்தன வாக விரியும்.அஃதாவது பதினேழ் நிலமும் ஆசிரியம் பெறும் என்னும் முறைமையால்எழுத்தளவையான் வைத்து உறழுமிடத்து 4 எழுத்தால் ஒன்றும், 5 எழுத்தால்மூன்றும், 6 எழுத்தால் நான்கும், 7 எழுத்தால் பன்னிரண்டும் ஆக இங்ஙனம்அடிகள் அளவின்றிப் பெருகுகின்றன. ஆசிரிய அடி 17, வெண்பா அடி 8, கலிஅடி 8, ஆக வைத்து அவற்றைச் சீர்களோடு உறழ, அளவின்றிப் பெருகுதல்மேலும் காணப்படும். (தொ. செய். 51 ச. பால.)