சீர்களைக் கொண்டு பின்னையோர் அடிகளுக்குப் பெயரிட் டமை போலாது,தொல்காப்பியனார் எழுத்துக்களைக் கணக்கிட்டு அடிகளுக்குப்பெயரிட்டுள்ளனர்.4 முதல் 6 எழுத்து முடிய உடைய அடி – குறளடி7 முதல் 9 எழுத்து முடிய உடைய அடி – சிந்தடி10 முதல் 14 எழுத்து முடிய உடைய அடி – அளவடி15 முதல் 17 எழுத்து முடிய உடைய அடி – நெடிலடி18 முதல் 20 எழுத்து முடிய உடைய அடி – கழிநெடிலடி(தொல். செய். 36-40 பேரா., நச்.)