அடிகளின் எண்ணிக்கை பற்றிஇளம்பூரணர் கூறுவன

அசைச்சீர் 4 ; ஈரசைச்சீர் 10 + 6 = 16; மூவசைச்சீர் 4 + 60 = 64;ஆக, சீர்கள் 84. இந்த 84 சீர்களிலும், இயற்சீரான் வருவதனை இயற்சீரடிஎனவும், ஆசிரிய உரிச்சீரான் வருவதனை ஆசிரிய உரிச்சீரடி எனவும்,இயற்சீர் விகற்பித்து வருவதனை இயற்சீர் வெள்ளடி எனவும், வெண்சீரான்வருவதனை வெண்சீரடி எனவும், வெண்சீர் விகற்பித்து வருவதைக் கலியடிஎனவும், நிரையீற்று வஞ்சிச்சீரான் வருவதனை நிரையீற்று வஞ்சியடிஎனவும், ஓரசைச்சீரான் வருவதனை அசையடி எனவும் வழங்கவேண்டும்.இயற்சீரடி நேரீற்றியற்சீரடி எனவும், நிரையீற்றியற்சீரடி எனவும்இருவகைப்படும். நேரீற்றியற் சீரடியாவது நேர் ஈறு நேர்முதல் ஆகியஇயற்சீர் வருதலும், நேர்பு முதலாகிய ஆசிரிய உரிச்சீர் வருதலும்,நேர்முதல் வெண்பா உரிச்சீர் வருதலும், நேர்முதல் வஞ்சியுரிச்சீர்வருதலும் நேர் முதல் ஓரசைச்சீர் வருதலும் என ஐந்து வகைப்படும்.இயற்சீர் வெள்ளடியும், நேர் ஈறும் நிரையீறும் என இரு வகைப்படும்.அவற்றுள் நேர்ஈறு, நிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழஐவகையாம். அவ்வாறே நிரையீறும், நேர்பும் நேரும் முதலாகிய ஐந்துசீரொடும் உறழ, ஐவகையாம்.வெண்சீர் நேர்முதலோடு உறழ்தலும், நிரைமுதலோடு உறழ்தலும் எனஇருவகைப்படும். அவற்றுள் நேர்பும் நேரும் முதலாகிய சீர்களோடு உறழ்தல்ஐந்துவகைப்படும். நிரைபும் நிரையும் முதலாகிய சீர்களோடு உறழ்தல்ஐந்துவகைப்படும்.நிரையீற்று வஞ்சியுரிச்சீர் முதலசையோடு ஒன்றுவனவும் ஒன்றாதனவும் எனஇருவகைப்படும். அவற்றுள் ஒன்றி வருவது நிரையும் நிரைபும் முதலாகியசீர்களோடு உறழ ஐவகைப்படும். ஒன்றாதது நேர்பும் நேரும் முதலாகியசீர்களோடு உறழ ஐவகைப்படும். உரியசையீற்று வஞ்சி யடியும் அவ்வாறே உறழ10 வகைப்படும்.அசைச்சீரடியும் அவ்வாறே இருவகையாக்கி உறழ 10 வகைப்படும்.இவ்வாறு தளை, நேரொன்றாசிரியத்தளை முதலாக ஏழ் வகைப்படும். அவ்வழி,ஓரசைச்சீர் இயற்சீரின் பாற்படும். ஆசிரிய உரிச்சீரும் அது.மூவசைச்சீருள் வெண்பா உரிச்சீர் ஒழிந்தன எல்லாம்வஞ்சியுரிச்சீராம்.அசைச்சீர், இயற்சீர், ஆசிரிய உரிச்சீர், வெண்சீர், வஞ்சியுரிச்சீர்என்னும் ஐந்தனையும் நிறுத்தி இவ்வைந்துசீரும் வருஞ்சீராய் உறழும்வழி25 விகற்பமாம். அவ்விருபத்தைந் தின்கண்ணும் மூன்றாவது ஐந்து சீரையும்உறழ நூற்றிருபத் தைந்து விகற்பமாகும். அந்தநூற்றிருபத்தைந்தின்கண்ணும் நான்காவது ஐந்து சீரையும் உறழ 625.விகற்பமாகும். (தொ. செய். 48. இள.)நிரையீற்றியற்சீரடியும் இவ்வாறே நிரை முதலாகிய ஐந்து சீரொடும் உறழஐந்து வகைப்படும்.ஆசிரிய உரிச்சீரடி இருவகைப்படும், நேர்பு ஈறும் நிரைபு ஈறும் என.அவற்றுள் நேர்பு ஈற்றுச் சீரை நேர்பும் நேரும் முதலாகிய ஐந்துசீரொடும் உறழ ஐந்து வகைப்படும். நிரைபு ஈற்றுச் சீரும் அவ்வாறேநிரைபும் நிரையும் முதலாகிய ஐந்து சீரொடும் உறழ ஐந்து வகைப்படும்.