அடிஎதுகைத்தொடை

அடிதோறும் முதலெழுத்து அளவு ஒத்திருப்ப, இரண்டாம் எழுத்தோஇரண்டாமெழுத்து முதலாக அச்சீரிலுள்ள ஏனைய எழுத்துக்களோ ஒன்றிவரத்தொடுக்கும் தொடை. எதுகை முதலிய தொடைகளில் குற்றியலிகரம்,குற்றியலுகரம், ஆய்தம், ஒற்று முதலிய எழுத்துக்களும் சேர்த்துக்கணக்கிடப் படும்.எதுகைக்கு இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வந்தாலும்மூன்றாம் எழுத்து ஒன்றிவந்தாலும் கூடக் கொள்வர். இரண்டாம் எழுத்தின்மேல் ஏறிய உயிர் ஒன்றி வருதலை உயிர் எதுகை எனவும், மூன்றாம் எழுத்துஒன்றி வருதலை மூன்றா மெழுத்தொன்று எதுகை என்றும் கூறுப. இன்னும்பிறவகை எதுகை சிலவுமுள.எ-டு : வ டி யேர்கண் நீர்மல்க வான்பொருட்கண் சென்றார்க டி யார் கனங்குழாய் காணார்கொல் காட்டில்இதன்கண் இரண்டாம் எழுத்து மாத்திரம் ஒன்றி வந்தவாறு.(யா. க. 36. உரை)