அடி எதுகைத் தொடைக்கண் முதலடி நேரசையில் தொடங் கின், அடுத்தஅடியும் நேரசையாகவே தொடங்குதல் வேண்டும். முதலடி நிரையசையில்தொடங்கின், அடுத்த அடியும் நிரையசையாகவே தொடங்குதல் வேண்டும்.இரண்டாம் எழுத்து ஒன்றுவது மாத்திரம் எதுகையாகாது. முதல் எழுத்துஅளவொத் திருப்பதும் அதற்கு இன்றியமை யாதது ஆதலின் இம்மரபுகொள்ளப்பட்டது. (யா. க. 36. உரை)