அடிதோறும் இறுதிக்கண் எழுத்தாவது சொல்லாவது ஒன்றி வருவதுஇத்தொடை.எ-டு : ‘அவரோ வாரார் கார்வந் தன் றே கொடிக்கு முல்லையும் கடிக்கரும் பின் றே’ ‘பரவை மாக்கடல் தொகுதிரை வரவும் பண்டைச் செய்தி இன்றிவன் வரவும் ’இவை கட்டளை ஆசிரிய அடிகள்இவற்றின்கண் அடிதோறும் இறுதிக்கண் எழுத்து ஒன்றிய வாறும்,அடிதோறும் சீராகிய சொல் ஒன்றி வந்தவாறும் காண்க. (தொ. செய். 96.நச்.)