அடக்கியல்

ஒத்தாழிசைக் கலிப்பாவின் ஒருவகையாகிய தேவபாணியின் சுரிதகம் இது.முன்னர்ப் பலவகையான் புகழ்ந்த தெய்வத் தினை ஒரு பெயர் கொடுத்து அடக்கிநிற்றலின் அடக்கியல் ஆயிற்று. (தொ. செய். 144 நச். உரை)சுரிதகம், அடக்கியல், வாரம், வைப்பு, போக்கியல் என்பன ஒருபொருட்கிளவிகள். (வீ. சோ. 117. உரை)