கொச்சக ஒருபோகின் ஒருவகை இது. சுரிதகம் என்னும் கலிப்பாஉறுப்புத்தனித்து வருதலின்றி, அச்சுரிதகச் செய்தி யையும் இணைத்துக் கூறும்அடிகளையுடைய ஒரே செய்யு ளாய் அடிமிகுந்து வருதல். இதனான் இவ்வகைக்கொச்சக ஒருபோகு ஆசிரியம், வெண்பா ஆகிய சுரிதகஅடி இறுதியில்கலத்தலின்றி ஒரே ஓசைத்தாகிய கலிப்பாவாய் வரும் என்பது. அதுஎ-டு : ‘மழைநுழைந்து புறப்பட்ட மதியமும் ஞாயிறும்போல்………… ……………………………………. ………………..யாயென் றல்ல தியாந்துணி யலமே.’எனவரும். அடக்கியலின்றி அடி நிமிர்ந்து வெண்பா இயலான் முச்சீரடிஈற்றடியாக முடிந்த அடிநிமிர்ந் தொழுகிய கொச்சக ஒருபோகினைப்பிற்காலத்தார் வெண்கலிப்பா என்பர். (தொ. செய். 149. பேரா. நச்.)