அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்துஒழுகும் ஒருபோகின் அளவு

அடக்கியல் இன்றி அடிநிமிர்ந்து ஒழுகிய கொச்சக ஒருபோகின் சிற்றெல்லை10 அடி, பேரெல்லை 20 அடி.எ-டு : ‘தடங்கடற் பூத்த தாமரை மலராகிஅடங்காத முரற்சியான் அருமறை வண்டிசைப்பஆயிர வாராழி அவிரிதழின் வெளிப்பட்டசேயிதழ் எனத்தோன்றும் செம்பகலின் இரவகற்றிப்படுமணிப் பகைநீங்கப் பருவத்து மழையானேநெடுநிலம் குளிர்கூர நீர்மைசால் நிழல்நாறிஅண்டங்கள் பலபயந்த அயன்முதலாம் இமையோரைக்கொண்டங்கு வெளிப்படுத்த கொள்கையை யாதலின்ஓங்குயர் பருதியஞ் செல்வநின்நீங்கா உள்ளம் நீங்கன்மார் எமக்கே’இது பத்தடியின் சுருங்காது அடக்கியலின்றி அடிநிமிர்ந் தொழுகியகொச்சக ஒருபோகு. (தொ. செய். 150 நச். )