அஞ்செவி அஞ்சிறை அங்கை : தொடர்வகை

நகர்ப்புறம் என்பதனைப் புறநகர் என்றாற்போலச் செவியகம் – கையகம் –
என்னும் இவ்விடவுறுப்புத்தற்கிழமைப் பெயரொடு முடிந்த ஆறாம்
வேற்றுமைத்தொகைச் சொல்லை முன் பின்னாக வழங்கலின், இவ்விரண்டும்
இலக்கணப் போலி யாய்த் தழாத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம் என்க. அகஞ்சிறை
என்பது ஏனையவற்றின் சிறை போலப் புறத்தின் கண்ண அன்றி அகத்தின்கண்ண
ஆதலின் ஏழாம் வேற்றுமைத் தொகை. (நன். 222. சங்கர.)