அச் – உயிரெழுத்துக்கள். ஆவி, சுரம் (ஸ்வரம்) என்பனவும் அவையே.வடமொழி இலக்கணத்தின் அடிப்படையாகக் கொள்ளும் மாகேசுவர சூத்திரங்கள்பதினான்கு.இவற்றின் இடையேயுள்ள மெய்யெழுத்துக்களை நீக்கி முதல் இறுதிஎழுத்துக்களைச் சேர்த்துக் குறியீடு கொள்வது, வடமொழி இலக்கணமானவியாகரண சாத்திர மரபு. இந்த முறையில் முதல் நான்கு சூத்திரங்களையும்சேர்க்க அச் (சு) என நிற்குமதனுள் உயிரெழுத்துக்கள் அடங்கும்.(குறிலாய் உள்ளவற்றின் நெடிலும் கொள்ளப்படும்.) அம் என்னும்அநுஸ்வாரமும் அ: என்ற விஸர்க்கமும் சேர, வட மொழியில் உயிரெழுத்துக்கள்பதினாறாம்.இவ்வாறு சூத்திரங்களில் முதலெழுத்தினையும் ஈற்றெழுத் தினையும்இணைத்துக் குறியீடுகள் கொள்ளுமுறை பிரத்தி யாகாரம் எனப்படும்.அல் (ஹல்) – மெய்யெழுத்து – வியஞ்சனம் – என்பதும் இதுவே.பிரத்தியாகார முறையில் ஐந்தாவது மாகேசுவர சூத்திரத்தின் முதல்எழுத்தான ஹ என்பதனையும், பதினான்காவது சூத்திரத்தின் இறுதி யெழுத்தானல் என்பதனையும் சேர்க்க வந்த குறியீடே ஹல் என்பது.இதனுள் வடமொழியின் மெய்யெழுத்துக்கள் முப்பத் தைந்தும் அடங்கும்.அவை க ச ட த ப – வருக்கங்கள் (5 x 5) இருபத்தைந்தும், ய ர ல வ ஶ ஷ ஸ ஹள க்ஷ – என்னும் பத்தும் சேர முப்பத்தைந்து ஆம்.உயிரின்றித் தாம் இயங்கா ஆதலானும், இவையின்றி உயிர் களும் சிறவாஆதலானும், தாமே தனித்து இயங்கும் ஆற்றல் அற்ற மெய்யெழுத்துக்கள்வியஞ்சனம் எனப்பட்டன.இவற்றை மகாப் பிராணன், அர்த்தப் பிராணன், அற்பப் பிராணன் எனஇவற்றின் ஒலி பற்றிப் பிரிப்பதுமுண்டு. தமிழில் மூவினப் பகுப்புப்போன்றது இது. ஐந்து வர்க்கங் களின் 2, 4ஆம் எழுத்துக்களும், ஷ ஸ ஹஎன்பனவும் மகாப் பிராணன்; ய ர ல வ ள – என்பன அர்த்தப் பிராணன்;ஐவர்க்கங் களின் 1, 3, 5ஆம் எழுத்துக்கள் அற்பப் பிராணன். (இப்பகுப்புஅனைவர்க்கும் உடன்பாடு அன்று.) (பி. வி. 4)