தேவாரப் பாடல் பெற்ற இவ்வூர் பற்றிய எண்ணம் சங்க இலக்கியங்களில்
இல்லை. 1. இத்தலம் கன்னியாகுமரியில் கன்னியாயுள்ள பகவதியைத் தரிசிக்க விரும்பிய
அகத்தியர் தாம் தனிமையிற் செல்வது தகாதெனக் கருதி, தமது பத்தினியார் உலோப
முத்திரையாருடன் செல்லுகையில் பூசித்தது. சுவாமி பெயர் அகத்தீச்சுரர். அம்பிகை
அமுதவல்லி. அச்சு + இறு + பாக்கம் – அச்சிறு பாக்கம். விநாயகரை வணங்காது
திரிபுரம் எரிக்கச் சென்ற இறைவனது அச்சு முறிந்த இடம் என்பர் இன்று செங்கற்பட்டு
மாவட்டத்தில் உள்ள இத்தலம். அச்சரப்பாக்கம் என்று வழங்குகிறது. அந்த அல்லது அழகிய
சிறு பாக்கம் என்ற பொருளில் பெயர் பெற்றிருக்கலாம் என்ற எண்ணமும் எழுகிறது.
மேலும் சேக்கிழார் கூற்று இவ்வூர் பெயரைச் சுட்டிய போதிலும் (திருஞான -1132 )
ஞானசம்பந்தர் இத்தலம் குறித்து பாடிய போதிலும் ( பதி 77, 175 ), இவ்வூர் பற்றிய
விளக்கங்களையோ, ஊர்ப்பெயர் பற்றியோ நாம் எதனையும் அறிந்து கொள்ள இயலவில்லை.