பேம் நாம் உரும் – என்னும் மூன்றும் அச்சமாகிய குறிப்பை உணர்த்தும்உரிச்சொற்கள். வருமாறு :‘மன்ற மராஅத்த பே(ம்)முதிர் கடவுள்’ (குறுந். 87)‘நாம நல்லரா’ (அகநா. 72)(நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்து நின்றது)‘உரும்இல் சுற்றமொடு’ (பெரும்பாண். 447) (தொ. சொ. 365 நச்.உரை)