அச்சப்பொருள்மேல் வரும் சொல்லிற்கு வேற்றுமையுருபு தொக அதன் பொருள்நின்றவழி, ஐந்தாம் வேற்றுமையுருபும் இரண்டாம் வேற்றுமையுருபும் ஒத்தஉரிமையவாய் மயங்கும்.எ-டு : பழி அஞ்சும்இத்தொகைநிலைத் தொடரை விரிப்புழி, ஐந்தாம் வேற்றுமை ஏதுப்பொருளைக்கொண்டால் பழியின் அஞ்சும் எனவும், இரண்டாம் வேற்றுமைச்செயப்படுபொருளைக் கொண் டால் பழியை அஞ்சும் எனவும் ஐந்தாவதும்இரண்டாவதும் மயங்கியவாறு. (தொ. சொ. 101 நச்.)