அசோதரம் கடலால் சூழப் பெற்றிருந்தது. அந்நகரில் அக்கடலொலி
எப்பொழுதும் கேட்கும்படி அமைந்திருந்தது. இரவிவன்மன் என்னும் மன்னன் அதை
ஆண்டான். அவன் மனைவி அமுதவதி அவர்கள் இருவருக்கும் இலக்குமி என்னும்
பெயரோடு மகளாக மணிமேகலை முற்பிறப்பில் பிறந்திருக்கிறாள்.
அரவக் கடலொலி அசோதரம் ஆளும்
இரவிவன்மன் ஒருபெருந்தேவி அமுதபதி வயிற்று
இலக்குமி யென்னும் பெயர் பெற்றுப் பிறந்தேன்” (மணிமே. 9;38 41)
அடவி நாடுகள்.
முனையூர் என்னும் காரை உள்ளடக்கிய ஐம்பதும் அடவி நாடுகள் எனப்படும். இவை
இடவகனுக்குச் சீவிதமாக அளிக்கப் பெற்றவை,
இடவகற் இருந்த முனையூருள்ளிட்
டடவி ஈன்னாடைம்பது கொடுத்து
விறற்போர் மன்னரிறுக்குந் துறைதொறும்
புறப்பது வாரமொடு சிறப்புப் பல செய்து
புட்பகம்புக்கு நின்னட் புடனிருந்து
விளித்தபின் வாவவென வளித்தவற் போக்கி” (பெருங். 4;9;28 33)