அசை விரளச் செந்தொடை

ஓரடியிலுள்ள ஈரசைச்சீர்களிலோ மூவசைச்சீர்களிலோ ஒரேவகையான சீர்வாராமல் பலவகைச் சீர்களும் வருதல்.எ-டு : ‘இருங்கழி மலர்ந்த வள்ளிதழ் நீலம்’ (அகநா. 270)நிரைநிரை நிரைநேர் நேர்நிரை நேர்நேர்கருவிளம் புளிமா கூவிளம் தேமாஇவ்வாறு ஈரசைச்சீர்களில் அசைகள் மாறி வருதல் அசை விரளச்செந்தொடையாம். (யா. க. 50. உரை)