ஓசை நிலைமையால் சீர்த்தன்மைப்பட நிறைந்து நிற்பின்,அசைநிலைமைப்பட்ட சொற்கள் சீர்நிலையையும் பெறும். முச்சீர்களையுடையவெண்பாவின் ஈற்றுச் சீர்க்கண் இவை மிகுதியும் வரும்.வெண்பா :‘கழல்தொழா மன்னர்தம் கை ’ (தண்டி. 21-2) நேர் (இயலசை)‘புனல்நாடன் பேரே வரும் ’ (முத்.) – நிரை (இயலசை)‘எய்போல் கிடந்தானென் ஏறு ’ (பு.வெ.மா. 8:22) நேர்பு (உரியசை)‘மேவாரை அட்ட களத்து ’ (களவழி 25) – நிரைபு (உரியசை)ஆசிரியம் :‘கழிந்தோர்க் கிரங்கு நெஞ்சமொடு – நிரைபுஒழிந்திவண் உறைதல் ஆ ற்று வோர்க்கே’ – நேர்புவெண்பா :‘முலைவிலங்கிற் றென் று முனிவாள்’ (தண்டி : 16) நேர்பு‘நெய்த்தோர் நிறைத் து க் – கணம்புகல’ (பு. வெ. மா. 3 : 5) நிரைபுஎன இடை வரும் உரியசைகளும் சீர்நிலைப்படுதல் கொள்ளப்படல்வேண்டும்.இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால்இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும்,நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்படும். (தொ. செய். 28. நச்.)