அசையும் சீரும் இசையொடு சேர்த்தல்

செய்யுட்கண் பயின்று வரும் எழுத்தானாம் அசைகளையும் அசையானாம்சீர்களையும், தூக்கும் பாவும் வண்ணமும் ஆகிய உறுப்புக்களுக்கு ஏற்ப,ஆசிரியம் வெண்பா முதலிய ஓசைகள் வழுவாமல் அவ்வவற்றிற்குரிய இசையொடுசேர்த்தி அவற்றின் வேறுபாடு தோன்ற வகுத்துணர்த்துதல் செய்யுளிலக்கணம்வல்லோர் முறை.என்றது, ஒருசெய்யுட்கண் அதற்குரிய ஓசையின்றி மாறினும், அவை இன்னாஓசைய ஆயினும் வழுவாம் என்றவாறு.எ-டு : ‘வேண்டுதல்வேண் டாமை இலானடிசேர்ந்தார்க்கு’என்னும் குறள்வெண்பாவின் அடியை‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு’என ஓதின் வழுப்படுகிறது. ஆதலின்,‘வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு’ என அசையை இசையொடுசேர்த்து இசைக்கப் பிழையா தாயிற்று. (தொ. செய். 11. ச. பால.)