எழுத்தின் ஒலியைக் கணக்கிட்டு வகைப்படுத்துவது அசை. அசையின்கூறுபாடுகள் அசைவகை எனப்படும். அவை இயலசையும் உரியசையும் என இரண்டாம்.(தொ. செய். 1 பேரா.)அசைவகை என்றது, இயலசையும் உரியசையுமாம் அசைக் கூறுபாட்டினை. (செய்.1 நச்.)எண்ணப்படாத ஒற்றுக்கள் பயன்படாது அசைத்து (-ஒலித்து) நிற்றலின்,அசையென்னும் பெயரும் தோன்றிற்று. (செய். 3 நச்.)நேரசை, நிரையசை, நேர்பசை, நிரைபசை என்பன நான்கும் அசைவகைகளாம்.