அசைபற்றிக் குற்றுகர வகை கோடல்

‘நெடிலே குறிலிணை குறில்நெடில் என்றிவை // ஒற்றொடு
வருதலொடு குற்றொற் றிறுதிஎன்(று) // ஏழ்குற் றுகரக்(கு) இடனென
மொழிப’ என்னும் இவ்வேழிடத்தும் (அசைபற்றி) வரும் குற்றியலுகரங்
கள் நெடிற்றொடர் முதலாகிய ஆறு தொடர்களுள்ளும் அடங்கும். இவ்வாறு
ஏழிடம் கொள்வார்க்குச் சுண்ணாம்பு – ஆமணக்கு – பிண்ணாக்கு –
முதலாயினவும், ஆய்தம் தொடர்ந் தனவும் அடங்கா என்றறிக.
(நன். 93 மயிலை.)