அசைபற்றிக் குற்றியலுகரம் வருமாறு

எ-டு : காசு – நெடிலசையை அடுத்தது; வரகு – குறிலிணை அசையை
அடுத்தது; மலாடு – குறில்நெடில் அசையை அடுத்தது; காற்று – நெடிலொற்று
அசையை அடுத்தது; எழுத்து – குறிலிணையொற்று அசையை அடுத்தது; விலாங்கு –
குறில்நெடிலொற்று அசையை அடுத்தது. கப்பு – குற்றொற்று அசையை
அடுத்தது.
இவையேழும் முறையே நெடிற்றொடர் – உயிர்த்தொடர் – உயிர்த்தொடர் –
வன்தொடர் – வன்றொடர் – மென்றொடர் – வன்றொடர்க்குற்றியலுகரங்களாக
அடங்குமாறு காண்க.