அசைநிலை இசைநிறை ஒருசொல்லடுக்கு – என்பன பொருள் குறித்திலவே எனின்,அவையும் சார்ந்த பொருளைக் குறித்தன. அன்றியும், எல்லாச் சொல்லும்பொருள்குறித்து வருதல் பெரும்பான்மை என்று கொள்ளப்படும்; ‘இவ்வூரார்எல்லாம் கல்வியுடையார்’ என்றவழி, கல்லாதார் உளராயினும் கற்பார் பலர்என்பது குறித்து நின்றாற்போலக் கொள்ளப்படும்.(தொ. சொ. 151 தெய். உரை)