அசைநிலையாக வரும் இடைச்சொற்கள்

யா கா பிற பிறக்கு அரோ போ மாது மா மன் (சாரியை யாகிய) இன் ஐ சின்மாள தெய்ய என ஓரும் அத்தை ஈ இசின் ஆம் ஆல் என்ப அன்று – என்பனஅசைநிலையாய் வரும்.வருமாறு :யா பன்னிருவர் மாணாக்கர் – ‘இவன் இவண் காண்டிகா’ கலி. 99 -‘தான் பிற வரிசை அறிதலின்’ புற. 140 – ‘நசைபிறக்கு ஒழிய’ புற. 15 -‘இருங்குயில் ஆலுமரோ’ கலி. 33 – ‘பிரியின் வாழா தென்போ தெய்ய -‘விளிந்தன்று மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே’ நற். 178 – ‘ஓர்கமாதோழி’ – ‘அதுமன் கொண்கன் தேரே’ – ‘காப்பின் ஒப்பின்’ வேற். 11 – ‘நேரைநோக்க நாரரி பருகி’ – ‘தண்ணென் றிசினே’ ஐங். 73 – ‘சிறிதுதவிர்ந் தீகமாளநின் பரிசிலர்’ – ‘சொல்லேன் தெய்ய’ – ‘அறிவார் யாரஃ திறுவுழிஇறுகென’ – ‘அஞ்சுவ தோரும் அறனே’ கு. 366 – ‘செலியர் அத்தைநின் வெகுளி’புற. 6 – ‘செழுந்தேர் ஓட்டியும் வென்றீ’ – ‘காதல் நன்மா நீமற் றிசினே’- ‘பணியுமாம் என்றும் பெருமை’ கு. 978, – ‘ஈங்கா யினவால்’ – ‘புனற்கன்னிகொண் டிழிந்தது என்பவே’ சீவக. 39 – ‘சேவடி சேர்தும் அன்றே’ சீவக.1. (தொ. சொ. 281, 297 298 நச். உரை)