அசைநிலையாக அடுக்கி வரும் சொற்கள்

கண்டீர் கொண்டீர் (கேட்டீர்) சென்றது போயிற்று – என்னும் சொற்கள்,கண்டீரே கொண்டீரே (கேட்டீரே) சென்றதே போயிற்றே – என வினாவொடுகூடிக்கண்டீரே கண்டீரே – முதலாக அடுக்கிவரும்போது வினைச்சொல்லாகாதுஅசைச்சொற்களாம்.கேட்டை நின்றை காத்தை கண்டை – என்பன அடுக்கியும் அடுக்காதும் வந்துஅசைநிலை ஆகும்.(தொ. சொ. 425, 426 சேனா. உரை)ஆக ஆகல் என்பது – என்பன, ஆகவாக – ஆகலாகல் – என்ப தென்பது – என்றுஅடுக்கி நின்றவழியே அசைநிலையாம். (தொ. சொ. 280 சேனா. உரை)