அசைநிலைக் கிளவி ஆகும் ஆரைக்கிளவி

ஆர் என்னும் இடைச்சொல் அசைநிலையாகும்வழி உம்மையை அடுத்தும்,உம்ஈற்றை அடுத்தும் வருதலே பெரும்பான்மை.எ-டு : ‘பெயரினாகிய தொகையுமார் உளவே’ (வேற். 6)- ஆர் உம்மையை அடுத்து வந்தது.‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எழுத். மொழி. 28)- ஆர் உம்ஈற்றை அடுத்து வந்தது. (தொ. சொ. 273 நச். உரை)