இஃது இடைச்சொல் வகை ஏழனுள் ஒன்று. இடைச்சொற்கள் தமக்கெனஒருபொருளின்றித் தாம் சார்ந்த பெயர்வினை களை அசையப்பண்ணும்நிலைமையவாய் வருவன அசை நிலையாம். (தொ. சொ. 252 நச். உரை)எ-டு : ‘அதுமற்று அவலம் கொள்ளாது’ (குறுந். 12)- பெயரை அடுத்த அசை‘அந்தில் கச்சினன் கழலினன்’ (அகநா. 76)- வினையை அடுத்த அசை(ஓ மற்று அந்தில் ஆர் ஏ குரை மா மியா இக மோ மதி இகும் சின் யா காபிற பிறக்கு அரோ போ மாது ஆக ஆகல் என்பது என்ப – முதலியனஅசைநிலைக்கிளவியாய் வரும் இடைச் சொற்களாம்.)