அசைச்சீர் இயற்சீர் போல்வது

‘கழல்தொழா மன்னர்தம் கை’ (தண்டி 21-2)‘புனல்நாடன் பேரே வரும் .’ (முத்.)‘எய்போற் கிடந்தானென் னேறு.’ (பு. வெ. மா. 8 : 22)‘மேவாரை யட்ட களத்து’ (களவழி. 25)வெண்பாவின் ஈற்றடியாக வரும் இவற்றுள், முறையே நேரசையும்நிரையசையும் நேர்புஅசையும் நிரைபுஅசையு மாகிய அசை(ச்சீர்) இயற்சீராகநின்றன. (தொல். செய். 27. பேரா.)