அசை சீராய் நின்றவிடத்துத் தளை வழங்கும்போது நேரசைச் சீருக்கு ஓர்அலகு கொடுத்து நேர்நேர் ஆகவும், நிரையசைச் சீருக்கு மற்றும் ஓர் அலகுகொடுத்து நிரைநேர் ஆகவும், நேர்புஅசைச்சீருள் ஓர் அலகு களைந்துதேமாவாகவும், நிரைபு அசைச்சீருள் ஓர் அலகு களைந்து புளிமாவாகவும்வைப்பர்.எ-டு : ‘ கழிந்தோர்க் கிரங்குநெஞ்சமொடு – நிரைபு ஒழிந்திவ ணுறைதல் ஆற்றுவோ ர்க்கே’ – நேர்பு. இஃது ஆசிரியப்பா.‘முலைவில ங்கிற் றென்று முனிவாள்’ (தண்டி. 16) நேர்பு‘நெய்த்தோர் நிறைத்துக் -கணம்புகல’ (பு. வெ. மா. 3 : 5) நிரைபு இவை வெண்பாஅடி.இவற்றுள் இடைவரும் உரியசைகளும் (நேர்பு, நிரைபு) சீர் நிலைப்படுதல்கொள்ளப்பட்டவாறு. (தொ. செய். 28. நச்.)இவை அசைச்சீரென வேறாக எண்ணப்படினும், தளைவகை நோக்குங்கால்இயற்சீர்க்கண் அடங்கும். செய்யுளிடையே வந்த நேர்பசை நேர்நேராகவும்,நிரைபசை நிரைநேராகவும் கொள்ளப்பட்டுத் தளைகொண்டவாறு காண்க.இனி, யாப்பருங்கல விருத்தி உரைப்பது -ஓரசைச்சீர் இயற்சீர் போலக் கொள்ளப்பட்டு வரும் சீர் முதலசையோடுஒன்றியது ஆசிரியத் தளையாகவும் ஒன்றாதது இயற்சீர் வெண்டளையாகவும்கொள்ளப்படும் என்பது. (யா. க. 21. உரை)