குறிலும் நெடிலும் குற்றியலுகரமும் என்னும் மூன்றும் அசைக்குஉறுப்பாவன என்பர், பேராசிரியரும் நச்சினார்க் கினியரும். (தொ. செய்.2)உயிரெழுத்து மெய்யெழுத்து சார்பெழுத்து என எழுத்தி யலைமூவகையாக்கி, குற்றெழுத்து நெட்டெழுத்து அளபெடை என உயிர் மூவகைப்படும்எனவும், வல்லினம் மெல்லினம் இடையினம் என மெய்யெழுத்து மூவகைப்படும்எனவும், குற்றியலிகரம் குற்றியலுகரம் ஆய்தம் எனச் சார்பெழுத்துமூவகைப்படும் எனவும் பாகுபடுத்து, உயிரும் மெய்யும் கூடிஉயிர்மெய்யெழுத்தாம் என அதனையும் சுட்டி, ஐகாரக்குறுக்கம்மகரக்குறுக்கம் என இரண்டனையும் கூட்டி இவை யெல்லாவற்றையும்குறித்துப்போந்தார் இளம்பூரணர். (செய். 2)உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், அளபெடை, வன்மை, மென்மை,இடைமை, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகார ஒளகார மகரக்குறுக்கங்கள் ஆகிய பதினைந்தும் அசைக்கு உறுப்பாம். (யா. க. 1)அளபெடையை உயிரளபெடை ஒற்றளபெடை என இரண் டாகப் பகுத்து அசைக்குஉறுப்புப் பதினாறு என்பாரும், அவற்றோடு ஆய்தக் குறுக்கமும் சேரப்பதினேழு என்பாரும் உளர்.பெருங்காக்கை பாடினியார், முற்கூறிய பதினைந்தில் ஒளகார மகரக்குறுக்கங்களை நீக்கி, ஏனைய பதின்மூன்றும் அசைக் குறுப்பென்றார்.சிறுகாக்கைபாடினியாரும், அவிஙயனாரும் முறையே அப் பதின்மூன்றனுள்ஆய்தத்தை நீக்கி எஞ்சிய பன்னிரண்டும், ஆய்தத்தையும் மெய்யையும் நீக்கிஎஞ்சிய பதினொன்றும் அசைக்கு உறுப்பு என்றனர்.நாலடி நாற்பது என்னும் நூலுடையார், மேற்காணும் பதினைந்தனுள் உயிர்- ஆய்தம் – ஒளகாரக் குறுக்கம் – என்னும் மூன்றையும் நீக்கி எஞ்சிய12-ஐயும் கூறினார். (யா.வி. பக். 30)பேராசிரியரும் நச்சினார்க்கினியரும், ஒற்றளபெடை மிகவும் அருகியேவருமாதலின் அதனை அசைக்கு உறுப்பாகக் கொள்ளாமல், தொடைக்கும்வண்ணத்திற்கும் உறுப்பாக்கி, மெய் அலகு பெறாதாகவே அதனை ஒத்தகுற்றியலிகரம் ஆய்தம் என்பனவற்றையும் மெய்யின் குறுக்கமாகிய மகரக்குறுக்கத்தையும் நீக்கி, உயிர்அளபெடையைக் குறிலும் நெடிலுமாகவும் ஐகாரஒளகாரக்குறுக்கங்களைக் குறிலாக வும் அடக்கி, அசைக்கு உறுப்பாவனகுறிலும் நெடிலும் குற்றுகரமும் ஆகிய மூன்றுமே என்றுகுறிப்பிட்டுள்ளமை உளங்கொளத்தக்கது.